Tuesday, April 6, 2010

numerology, எண்கணிதம்

ஆங்கில எண் கணித பெயரியல்
எண்கணித பெயரியல் என்பது பெயரை ஆங்கிலத்தில் எழுத எண்கணித சோதிடவியலை (numerology)பயண்படுத்துவதாகும்

இது ஆங்கில மொழியயின் எழுத்துருக்களை மட்டும் அடிப்படையாக கொண்டது

இந்திய மொழிகளில் வார்த்தையில் ஒரு எழுத்தை கூடுதலாகவோ அல்லது குறைத்தோ எழுதினால் அது மொழியினை சிதைத்துவிடும், பொருள் மாறுபடும். மேலும் அது கண்டிப்பாக ஏற்புடையதல்ல. இந்தநிலையில் ஆங்கில மொழியினை சிதைப்பதையும் ஆங்கில இலக்கியவாதிகள் ஏற்பதில்லை

பெயரியலுக்காக பயண்படுத்துவதால் ஆங்கில உச்சரிப்பை மாற்றலாம் ஆனால் இதனால் ஆங்கில வார்த்தைகளின் பொருள் மாறுதலை அடையாது ஏனெனில் இது மாற்று மொழியின் உச்சரிப்பை மட்டும் தான் ஆங்கிலத்தில் எழுதுகிறோம் அன்றி மூல ஆங்கில வார்த்தையை இது பாதிப்பதில்லை

உலகின் உள்ள ஒவ்வொரு மொழிக்கும் ஒரு தனித்துவம் உண்டு அத்தகைய சிறப்பை நாம் பெயர் சூட்டலுக்காக சிதைக்கக்கூடாது என்பதே எனது விருப்பம். ஏனெனில் ஒரு மொழி உருவாக பல ஆயிரம் ஆண்டுகள் ஆகிறது.

மரபு, கலாச்சாரம், பண்பாடு, பழக்கவழக்கம் ஆகிய வற்றால் உருவாகிய ஒரு மொழியினை நம் "அதிர்ஷ்டம்" என்கிற ஒரு நோக்கத்திற்காக பிழையாக எழுதக்கூடாது என்பதுதான் இலக்கியவாதிகளின் வெளிப்பாடும், வேண்டுதலும் ஆகும்

பெயர் சூட்டல்
  • காலம் சென்ற மூதாதையர் பெயர் சூட்டினால் அடுத்த சந்ததிக்கு நம்முந்தைய தலைமுறை பெயர்களை நினைவு படுத்த முடியும். இதனால் இந்திய பண்பாடான பெரியவர்களுக்கு தரப்படும் மரியாதை கட்டிக்காக்கப்படும்.

  • குலதெய்வம் பெயர் சூட்டுவதும் காலம் காலமாக இருக்கும் ஒரு பழக்க வழக்கம். தற்பொழுது பெயர் சூட்டல் நிகழ்ச்சி அன்று மட்டும் முதலில் குலதெய்வம் பெயரை காதில் கூறிவிட்டு பின்னர் தங்களுக்கு பிடித்த பெயரை அதிகாரபூர்வமாக பதிவுசெய்வது தற்பொழுது நடைமுறையில் உள்ள வழக்கம் ஆகும்.

  • நட்சத்திர பெயர் சூட்டுவதுதான் தற்பொழுது பெரும்பாலும் உள்ள நடைமுறையாகும். நட்சத்திரத்தின் அடிப்படையில் வரும் எழுத்துக்களை முதன்மையாக கொண்டு பெயர்களை தெரிவுசெய்து அதை குழந்தைக்கு சூட்டுவது இந்து முறையாகும்

  • எண் கணித பெயரியல் துணையால் ஆங்கில எழுத்துக்களை கூட்டி அல்லது குறைத்து வைக்கப்படுவதும் தற்பொழுதைய வழக்கங்களில் ஒன்றாகும்

  • காரணப்பெயர் இது குழந்தை பிறக்கும் சூழல் அடிப்படையில் வைப்பதாகும். கார்திகை தீபம் அன்று பிறக்கும் குழந்தைக்கு அண்ணாமலை, அருணாசலன், கார்திகா என்றம் பாரதி பிறந்த நாளில் பிறந்தால் பாரதி என்றும் வைத்து பிறப்பின் கால சூழலை நினைவுகூறுவதாகும்
  • எண்பெயரியலில் பலவேறு முறைகள் பயண்படுத்தப்படுகிறது. அவைகள் பின்வருமாறு

    இந்திய ஜோதிடவியல் 9 எண்களை மட்டும் கொண்டது


    நட்சத்திரத்தின் எண் அடிப்படை : இம்முறையில் அஸ்வினி நட்சத்திரம் முதல் எண்ணாகவும் ரேவதி (27 > 2+7 =9) 9 எண்ணாகவும் கணிக்கப்படுகிறது

    இராசி அடிப்படையில் முதல் இராசியான மேஷத்திற்கு 1 ஆகவும் 12ஆம் இராசியான மீனத்திற்கு (12>1+2+3) 3 எண் எனவும் கணக்கிடப்படுகிறது.

    தேதி அடிப்படையில் ஒருவரின் தேதியை கூட்டிவரும் தொகை அடிப்படையில் வரும் எண் அடிப்டையில் தேர்வுசெயவது

    15 ஆகஸ்ட் 1947
    15 + 8+ 1947 =1970
    1+9+7+0 = 17
    1+7=8 ஆக இந்திய சுதந்திர தினத்தின் கூட்டு எண் 8 ஆகும்.

    இப்படி பலவேறு முறைகளில் எண்பெயரியல் கணக்கப்பட்டு அதன் அடிப்படையில் பெயர் தேர்வு செய்வதாகும்

  • கூட்டு எண்
    நட்சத்திரம்
    நட்சத்திரம்
    நட்சத்திரம்
    1
    அஸ்வினி
    மகம்
    மூலம்
    2
    பரணி
    பூரம்
    பூராடம
    3
    கிருத்திகை
    உத்திரம்
    உத்திராடம்
    4
    ரோகினி
    அஸ்தம்
    திருவோணம்
    5
    மிருகசீருடம்
    சித்திரை
    அவிட்டம்
    6
    திருவாதிரை
    சுவாதி
    சதையம்
    7
    புணர்பூசம்
    விசாகம்
    பூரட்டாதி
    8
    பூசம்
    அனுஷம்
    உத்திரட்டாதி
    9
    ஆயில்யம்
    கேட்டை
    ரேவதி




    எண்
    1
    2
    3
    4
    5
    6
    7
    8
    9
    இராசி
    மேஷம்
    ரிஷபம்
    மிதுனம்
    கடகம்
    சிம்மம்
    கன்னி
    துலாம்
    விருச்சிகம்
    தனூர்
    இராசி
    மகரம
    கும்பம்
    மீனம்







    ஆங்கில எழுத்தும் எண்கணிதமும்
    எழுத்து
    A
    B
    C
    D
    E
    F
    G
    H
    I
    J
    K
    L
    M
    N
    O
    எண்
    1
    2
    3
    4
    5
    6
    7
    8
    9
    1
    2
    3
    4
    5
    6















    எழுத்து
    P
    Q
    R
    S
    T
    U
    V
    W
    X
    Y
    Z




    எண்
    7
    8
    9
    1
    2
    3
    4
    5
    6
    7
    8




    இராமன் என்கிற பெயருக்கு ஆங்கிலப்படி
    RAMAN > 9+1+4+1+5 =20 என்றால் 2 ஆகும் ஆனால் அவருக்கு எண்கணிதப்படி 3 வரவேண்டும் என்றால் கூடுதலாக 1 எண் சேர்க்க வேண்டியுள்ளது அப்பொழுது என்கிற A ஆங்கில எழுத்தை சேர்த்தவுடன் கூட்டுஎண் 3 ஆகிவிடும். ஆங்கிலத்தில் எழுதும் பொழுது RAAMAN என்று எழுதவேண்டும்.

4 comments:

  1. இதில் இடம் பெற்ற தகவல்கள் அனைத்தும் காப்பிரைட் சட்டப்படி தவறு உடனே நீக்கவும்
    பாலு. சரவண சர்மா
    www.prohithar.com

    ReplyDelete
  2. ஜாதகம் கணிக்க,புதிய பெயர் வைக்க,பெயர் மாற்றம்-திருத்தம் செய்ய அனுகவும் சூர்யா 8940081283

    ReplyDelete