Tuesday, April 6, 2010

தை அமாவாசை 2010

தை அமாவாசை 2010
Thai Amavasai (Mahara Amavasya-Utrayanam) 2010

India - இந்தியா :

This year Thai Amavasai Falls on 14 and 15 th jan 2010

இவ்வருடம் தை அமாவாசை தை முதல் நாள் பொங்கல் அன்று வருகிறது. அன்று காலை 10:12 முதல் அமாவாசை துவங்கி மறுநாள் நன்பகல் 12:42 வரை உள்ளது. மறுநாள் அமாவாசை முடிவில் சூரியகிரஹணம் நடைபெறுகிறது.

பண்டிகை நாட்களில் அமாவாசை வரும் பொழுது “முதலில் அமாவாசை வழிபாடு செய்த பின்னர் பண்டிகையை கொண்டாட வேண்டும். எனவே காலையில் 10:15 மணி அளவில் தர்ப்ணம் செய்து வீட்டை தூய்மைபடுத்தி பின்னர் பொங்கல் பண்டிகையை கொண்டாட வேண்டும்.

பொங்கல் அன்று வரும் அமாவாசை வழிபாட்டுக்காக தனியாக படையல் இல்லை, காக்கைக்கு அன்னம் இல்லை. பொங்கல் வழிபாட்டில் சூரிய வழிபாடு முடிந்ததும் காக்கைக்கு அன்னம் வைக்கவேண்டும். மேலும் மறுநாள் 15.1.2010 கிரஹணம் துவக்கத்தில் கிரஹண தர்ப்பணம் செய்தல் நன்று.

அமாவாசை மற்றும் அயன புண்ணிய கால தர்பண சங்கல்பம்: விரோதி, உத்திராயணம், ஹேமந்த ருது, மகர மாஸம்( சாந்திரமான புஷ்ய மாஸம், பகுள பட்ச), கிருஷ்ண பட்ச அமாவாஸ்ய, பூர்வாஷாட நட்சத்திரம், குரு வாஸரம்

கிரஹண புண்ணியகால தர்ப்பண சங்கல்பம்: விரோதி, உத்திராயணம், ஹேமந்த ருது, மகர மாஸம்( சாந்திரமான புஷ்ய மாஸம்- பகுள பட்ச), கிருஷ்ண பட்ச அமாவாஸ்ய, உத்திராஷாட நட்சத்திரம், ப்ருகு வாஸரம் ஸூர்யோப ராக புண்யகாலே திலதர்ப்பணம் கரிஷ்யே. என்று சூரிய கிரஹண துவக்கத்தில் செய்யவேண்டும்.

இந்தியாவில் 15.1.2010 வெள்ளிக்கிழமை மாட்டுப்பொங்கல் அன்று கங்கண சூரிய கிரகணம் காலை துவங்கி மாலையில் நிறைவடைகிறது. இடத்தின் தீர்க, அட்ச ரேகை அளவுகளுக்கு ஏற்ப கிரகண நேரம் வேறுபடும். மிக அதிகமான நேரம் தமிழகத்தின் தென்பகுதியில் தெரியும்.

Solar Eclipse 15.1.2010
சூரிய கிரஹணம் 15.1.2010 வெள்ளிக்கிழமை


இடம் Place

துவக்கம் Begin

உச்சம் Greatest

முடிவு End

பூமியில் On Earth

காலை 9:35 AM

பகல் 12:51PM

மாலை 15:38 PM

சென்னை Chennai

காலை 11:25

பகல் 13:30

மாலை 15:16

கன்னியாகுமரி வைர மோதிர காலம்
துவக்கம் பகல் 13:10
முடிவு 13:21

ஜோதிட பார்வையில் :
கிரஹணம் உத்திராடம் நட்சத்திரத்தில் நிகழ்வதால் முன், பின் நட்சத்திரங்களான பூராடம், திருவோணம், 10ஆம்(திரிகோண) நட்சத்திரங்களான கிருத்திகை, உத்திரம் நட்சத்திரத்தினர் நவக்கிரக சாந்தி அர்ச்சனை மற்றும் அருகில் உள்ள ஆதரவற்றோர் இல்லங்களில் அன்னதானம் செய்யவும்
Astrological View:
Uthiradam, Pooradam, Thiruvonam, Uthiram, Karthigai stars are affected by Solar Eclipse. Perform Navagrha Archana at temple and Annadanam (offering food ) at nearest Orphanage

தங்கள் பகுதியில் நிகழும் கிரஹண நேரம் கணக்கிட எனது இணையதளத்தினை பார்வை இடவும்
Please Visit my website for calculate Eclipse time for your place
http://www.prohithar.com/eclipse_calculator.html

பூமியில் நிகழும் கிரஹணகால மொத்த நேரம் தரப்பட்டுள்ளது வட்டாரத்தில் நிகழும் கிரஹணம் பற்றிய உள்ளூர் நேரம் விரிவாக அறிய எனது இணைய தளத்தினை பார்வை இடவும்
http://www.prohithar.com/eclipses.html

தானம் - அமாவாசை நாட்களில்

# பசு, எருமை மாட்டிற்கு தவிடு, அகத்திகீரை, வெல்லம் கலந்து தானம் செய்யலாம்.
# மூதாதையர்கள் நினைவாக ஏழை மாணவர்களுக்கு படிக்க உதவிடலாம்
# ஆதரவற்றோர் இல்லங்களுக்கு பணம் மற்றும் பொருள் உதவி செய்திடலாம்
# நமது பண்பாட்டின் ஆணிவேராக திகழும் வேதபாட சாலைகளுக்கு நிதி தந்து ஆதரவளிக்கலாம்
# திருக்கோவில்களில் அன்னதானம் செய்யலாம்

Astronomical Ephemeris and Nautical Almanac Data By
Positional Astronomy Centre ( P.A.C.), Kolkatta,
Council of Meteorology and Atmospheric Sciences ( CMAS ) of the Govt. of India.

மாளய அமாவாசை 2009
Malaya Amavasai 2009 (Mahalaya Amavasai - Dakshnayanam)
Tharpanam

மாளய அமாவாசை முழுவிபரம
Malaya Amavasai Full details

தர்பண மந்திரம்
Tharpana Mantram(Smartha, Vadakalai, Thenkalai)

ஒலி வடிவில் தர்பண மந்திரம் பகுதி1 - பகுதி 2
Tharpana Mantram(Audio- Mp3) Part 1 - Part 2


No comments:

Post a Comment