Tuesday, April 6, 2010

தியானம்

ஓங்கார தியானம்

ஓங்காரமாகிய பிரணவ மந்திரத்தின் உள்ளே அகாரமாகிய சிவமும்,உகாரமாகிய சக்தியும்,மகாரமாகிய பரமும் ஓன்று கூடி சர்வ அண்டங்களுக்கும் தாயாகி :ம்: என்ற சப்தாட்சரத்துடன் நிற்க வல்லதாகும்.

இதனுள் முறையே பதி,பசு,பாசம் ஆகிய மூன்றினுள்ளே அடங்கி இருக்
கின்றது.
இதன் உட் பொருளாவது யாதெனில் பதி என்பது---பராபரமாகிய பரமேஸ்வரமாகவும்,பசு என்பது---உயிராகவும்,பாசம் என்பது---உடலாகவும் இயங்கி வருகின்றது.

1.இவற்றுள் பதியாகிய பரத்திற்கு பசுவாகிய உயிரையும்,
பாசமாகிய உடலையும் யாதென்று தெரியும்.

2.பசுவாகிய உயிருக்கு பதியாகிய பரத்தையும்,பாசமாகிய உடலையும் யாதென்று தெரியும்.

3.பசுவாகிய உடலுக்குப் பதியாகிய பரத்தையும்,பாசமாகிய உடலையும் யாதென்று தெரியாது.

எனவே மாயா காரணத்தின் நிமித்தம் மயங்கித் திரியும் இம் மனத்தை தவப் பயிற்சியின் மூலம் ஒரு நிலைப்படுத்தி உடல் உயிராகிய இரண்டையும் பராபரமாகிய பரமேஸ்வரத்தின் இடத்திலே ஒன்று சேர்த்து அணிமாதி அஷ்ட சித்துக்களும் அடைந்து முடிவில் வீடு பேற்றினை அடைவிக்க வல்ல பேராற்றல் மிக்க மந்திரமே
பிரணவமாகிய ஓங்காரமாகும்.

ஓம் என்ற எழுத்தினுக்குள்ளே அ-உ-ம மூன்றும் சேர்ந்துள்ளது.இதனை உ,அ,ம என்று மாற்றி செபம் செய்ய ஓங்காரம் பிறக்கும். இதன் பயனால் ஆறு ஆதாரங்களில் ஒன்றாகிய மூலாதாரத்தில்(குதத்திற்கும் கோசத்திற்கும் நடுப் பாகம்)அகர உகரங்களாகிய பசு பாசம் ஆகிய இரண்டும் சேர்ந்து (இடகலை பிங்கலை) அக்கினியானது மூண்டு எழுந்து சுழிமுனை நாடி துறந்து பதி ஆகிய பரத்துடன் கலந்து (சுழிமுனை)பிரமத்தண்டம் ஆகிய முதுகுத்தண்டு வழியாக சிரசு உச்சியை அடைந்து பின்பு ஆகாயமாகிய வெட்ட வெளியிற் சென்று சேரும்.

இதன் பயனால் பஞ்சபுலாதிகளும்,மனமாதி இந்திரியங்களும்,96 தத்துவார்த்த விசயங்களும் ஒரு நிலைப்பட்டு சமாதி நிலையை அடைந்து சூட்சுமாதி காரண தேகங்களால் வான வெளியில் சஞ்சாரம் செய்யக் கூடிய ஆற்றலைப் பெறுவதுடன் மஹா சித்தர்களாய் விழங்குவார்கள் என்பது திண்ணம். தொடரும்!

No comments:

Post a Comment